• Sat. Dec 13th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அரபிக் குத்துக்கு ஆட்டம் போட்ட ராஷ்மிகா..!

Byகாயத்ரி

Mar 11, 2022

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்துவிட்ட நிலையில் படத்தின் புதிய அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகின்றன. இப்படத்தில் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள அரபிக் குத்து பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் எழுதியுள்ள இப்பாடல் பல சாதனைகளை படைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இப்பாடலில் பலரையும் கவர்ந்த விஜய்யின் நடனம் அனைவரையும் நடனமாட வைத்துள்ளது. தற்போது அரபிக் குத்து பாடலுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நடனமாடிய வீடியோவை அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.