• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

காதல் கசமுசாவில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா – தேவரா கொண்டா

சமீபத்தில் வெளியான புஷ்பா படத்தில் ஸ்ரீவள்ளியாக நடித்து இப்போது அகில இந்திய பிரபலமாகி இருக்கும் ராஷ்மிகா மந்தனா, கர்நாடகத்தை சேர்ந்தவர். கிரிக் பார்ட்டி என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்குபடத்தில் நடிக்க தொடங்கி முன்னணி நடிகை ஆனார்.

தெலுங்கில்கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் விஜய் தேவரகொண்டா நடித்தார் அப்போது முதலே இவர்களுக்குள் காதல் என தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளது. ஆனால் இதுகுறித்து இருவரும் மவுனம் காத்து வந்தார்கள்.

இப்போது சில நிகழ்வுகளை பார்க்கும் போது இருவரும் காதலிக்கிறார்களோ என்ற சந்தேகத்தை அதிகரித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு விஜய் தேவரகொண்டா படப்பிடிப்புக்காக பாரீஸ் சென்றார். அவர் பாரீசில் தங்கி இருக்கும்போது ராஷ்மிகா மந்தனாவும் பாரீஸ் சென்றார். இப்போது இருவரும் மும்பை நட்சத்திர ஓட்டல் ஒன்றிலிருந்து பின்புற வாசல் வழியாக ஒருவர் பின் ஒருவராக வெளியேறி ஒரே காரில் ஏறிச் செல்லும் படங்கள், வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதனால் இருவரும் காதலிப்பது உண்மை தான் சீக்கிரத்திலேயே பூனைக்குட்டி வெளியில் வந்துவிடும் என சமூக வலைத்தளங்களில்ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.