• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

நெட்டிஸன்களுக்கு ராஷிக்கண்ணாவின் வேண்டுகோள்!

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் இந்தியிலும் பிஸியாக நடித்து வரக்கூடிய நடிகை தான் ராஷி கண்ணா. தற்போது ஹிந்தியில் ருத்ரா எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சமூக வலைதளப் பக்கங்களில் தென்னிந்திய திரையுலகம் குறித்து ராஷி கண்ணா தவறாக பேசியதாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள அவர், நான் எந்த மொழிகளில் நடித்தாலும் அதற்குரிய மரியாதையை தவறாமல் கொடுத்து வருகிறேன். தயவுசெய்து இதுபோன்ற தவறான செய்திகளை பரப்ப வேண்டாம். நான் தென்னிந்திய சினிமா பற்றி விமர்சித்து எப்பொழுதும் பேசியது இல்லை என தெரிவித்துள்ளார்.