நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் இன்று தீர்ப்பு வரவுள்ளதால் கேரளாவில்பெரும் பரபரப்பு .
கேரள நடிகை ஒருவர் காரில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், வழக்கு தொடர்பாக நடிகர் திலீப்பின் செல்போனில் இருந்து அழிக்கப்பட்ட முக்கியமான கோப்புகளை சிக்கியுள்ளன.
படபிடிப்பு முடிந்து காரில் திரும்பிய கேரளத்தின் பிரபல நடிகை 2017-ம் ஆண்டு கடத்தப்பட்டு கடும் பாலியல் அத்துமீறலுக்கு ஆளானார். இந்த வழக்கில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வழக்கின் விசாரணை மந்தமாக நடந்து கொண்டிருந்தது. மேலும் விசாரணை அதிகாரிகளை கொலைசெய்ய திட்டம் தீட்டியதாக புதிய வழக்கும் திலீப் மீது பாய்ந்தது.
தீலீப்பின் தொலைபேசியில் அழிக்கப்பட்ட போட்டக்கள்,வீடியோக்கள்களை மீட்க இயலாத நிலை இருந்தது. இந்நிலையில் திலீப்பின் தொலைபேசியில் இருந்து சாட்கள், போட்டோ, வீடியோக்கள் உட்பட 10 ஃபைல்களை ஹேக்கர்
சாய் மீட்டார். தற்போது மீட்டெடுக்கப்பட்ட பைல்கள் முக்கியமான ஆதாரங்கள் என போலீசார் கூறியுள்ளனர். இந்த வழக்கில்
இன்று பிற்பகலுக்கு மேல்கேரள நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. இதனால் கேரளாவில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
பலாத்கார வழக்கு இன்று தீர்ப்பு -கேரளாவில் பெரும் பரபரப்பு
