• Mon. Feb 23rd, 2026
WhatsAppImage2026-02-12at2247202
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம்..,

ByA.Tamilselvan

Aug 29, 2022

இலங்கை கடற்படையால் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று வேலைநிறுத்தம் அறிவிப்பு
ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் ஒரு விசைப்படகு மற்றும் 6 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையே, அனைத்து விசைப்படகு மீனவர்கள் சங்க அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்கச் சென்ற படகுடன் 6 மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படைக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று ஒருநாள் ராமேசுவரத்தில் விசைப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.