• Wed. Apr 24th, 2024

ஆட்டோக்களுக்கு அரசு மூலம் செயலி…

Byகாயத்ரி

Aug 29, 2022

ஆட்டோக்களில் பயணிப்பவர்களிடம் நேரம் மற்றும் தூரத்துக்கு ஏற்றவாறு பல வகையான கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இதனால் ஓலா, ஊஃபர் உள்ளிட்ட தனியார் செயலி வழியாக இயங்கும் ஆட்டோக்களை வாடிக்கையாளர்கள் நாடுகிறார்கள். ஆனால் அந்நிறுவனங்களும் நெரிசல் நேர கட்டணம், காத்திருப்பு கட்டணம் உள்ளிட்ட பல கட்டணங்களை வசூலிக்கிறது. இவை ஒரே மாதிரியாக இல்லாத காரணத்தால் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதனால் தமிழக அரசே செயலியை உருவாக்கி குறைந்த கமிஷன் தொகையுடன் ஒரே மாதிரியான மீட்டர் கட்டணத்தை நிர்ணயம் செய்தால் பயணிகளுக்கும், ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளருக்கும் லாபகரமாக இருக்கும் என்று ஆட்டோ தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி வருகின்றனர். அடுத்த மாதம் 13ம் தேதிக்குள் கட்டணம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் ஆட்டோக்களுக்கு அரசு செயலி உருவாக்க வேண்டும் அப்படி இல்லாவிட்டால் மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடந்து போவதாகவும் ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *