• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு

ByA.Tamilselvan

Aug 16, 2022

ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன் பிடிப்பதற்கான நேற்று அனுமதி சீட்டைப் பெற்று 500க்கும் மேற்பட்ட விசைப்பட்டுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர்.அவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி நான்கு விசைப்படைகளின் வலைகளை வெட்டிவிட்டு சேதப்படுத்தியது.அதோடு படகுகளில் இருந்த நான்கு ஜிபிஎஸ் கருவிகளை இலங்கை கடற்படை கைப்பற்றி மீனவர்களை விரட்டி அடித்தது. இதையடுத்து 14 நாட்கள் கழித்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் விரட்டி அடிக்கப்பட்டது சக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.