• Thu. Mar 28th, 2024

மதுரை சித்திரை திருவிழாவிற்கு தயாராகும் ராமராயர் மண்டகப்படி..!

Byவிஷா

Apr 19, 2023

வருகிற ஏப்ரல் 23ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்க சித்திரை திருவிழாவிற்கு ராமராயர் மண்டகப்படி தயாராகி வருவதால் பொதுமக்கள் குதூகலத்தில் உள்ளனர்.
மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழாவானது, வருகின்ற ஏப்ரல் 23ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மீனாட்சி திருக்கல்யாணம், திக்விஜயம், தேரோட்டம், பூப்பல்லாக்கு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்துருதல் என சித்திரைத் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், சித்திரை திருவிழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை காண்பதற்காக அழகர் கோவிலில் இருந்து புறப்பாடாகி மதுரைக்கு வரும் கள்ளழகர் மே ஐந்தாம் தேதி வைகை ஆற்றில் எழுந்தருளுவார்.
பின்பு மதுரையில் உள்ள ஒவ்வொரு மண்டகப்படிக்கும் சென்று தீர்த்தவாரி நடைபெற்று மறுநாள் இப்பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியில் கள்ளழகர் தசாவதாரம் எடுக்கும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெறும். இரவு 11 மணிக்கு தொடங்கப்படும் இந்த நிகழ்வு விடிய விடிய பல்வேறு அவதாரங்கள் எடுத்து வெகு விமர்சியாக நள்ளிரவு வரை கொண்டாடப்படும். இந்த நிகழ்வை ஒட்டி இப்பகுதியில் உள்ள ராமராயர் மண்டகப்படியை சுத்தம் செய்து பெயிண்டுகள் அடிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணியானது அழகர் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *