• Thu. Dec 11th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

மீண்டும் கதாநாயகனாக ராமராஜன்

ByA.Tamilselvan

Sep 20, 2022

சாமானியன் படம் மூலமாக 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கதாநாயகனாக ராமராஜன் களம் இறங்குகிறார்.
தமிழ் சினிமாவின் 90 காலகட்டங்களில் கிராமத்து படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் ராமராஜன்தான். இவர் நடித்த பல படங்கள் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் படங்கள் வெற்றி பெற்றுள்ளன. ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’, ‘எங்க ஊரு காவல்காரன்’, ‘ போன்ற படங்கள் இன்றுவரை ரசிகர்களால் கொண்டாடக்கூடிய படங்களாக பார்க்கப்பட்டு வருகின்றன. ராமராஜன் நடிப்பில் கடைசியாக 2012-ம் ஆண்டு ‘மேதை’ என்ற படம் வெளியானது. அதன்பிறகு பட வாய்ப்புகள் இல்லாமல் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். ஆனாலும் அவ்வப்போது ராமராஜன் மீண்டும் நடிக்க வருவதாக தகவல்கள் வெளியாகி கொண்டே இருந்தன.
இந்நிலையில் அவர் மீண்டும் சினிமாவில் கதாநாயகனாக நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. ராகேஷ் இயக்கும் ‘சாமானியன்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் தனது 2-வது இன்னிங்ஸை ராமராஜன் தொடங்குகிறார். இது ராமராஜனுக்கு 45-வது படமாகும். இந்த படத்தில் ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். ராமராஜன் மீண்டும் கதாநாயகனாக நடிக்க வருவது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.