• Wed. Jun 3rd, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

சினிமாவில் இப்போதான் அ.. ஆ.. போட்டுள்ளார்…. அதுகுள்ள இவ்வளவு அலப்பறையா.. சின்னத்திரை பிரபலம் செய்யும் ரகளை…!!

Byகாயத்ரி

Sep 20, 2022

சினிமாவை பொறுத்தவரை அறிமுக நடிகைகள் மற்றும் நடிகர்கள் ஒரு திரைப்படத்தில் நடித்து, பின் அப்படம் நல்ல வரவேற்பை பெற்றபின் சிலபேரின் நடவடிக்கைகளில் மாற்றம் வந்துவிடும். தனக்கென தனி கேரவன் வேணும், நான் இந்த சாப்பாடு தான் சாப்பிடுவேன், அந்த வசதி வேணும், இந்த வசதி வேணும் என்று பெரிய லிஸ்ட்டே போடுவார்கள்.

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் சிவாங்கி. தற்போது ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து அந்த படமும் ஹிட்டாகி விட்டது. இதனால், தற்போது ஒரு படத்திற்கு நடிக்க செல்கிறார் என்றால் என் பாதுகாப்புக்காக என் குடும்பமும் வரும். அதற்கான செலவு, நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் கண்டிஷன் போடுகிறாராம். வெளியூரில் ஷூட்டிங் என்றால் சிவாங்கி மட்டுமில்லாமல் அவரது குடும்பத்தினரின் விமான டிக்கெட் முதல் சாப்பாடு, தங்கும் இடம் வரை தயாரிப்பாளரே பார்க்க வேண்டும் என்று அடுக்கடுக்காக கண்டிஷன் போட்டு வருகிறாராம். இதுபோக, ஒரு படத்தில் நடிக்க வருவதற்கு, ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு தன்னுடன் மேக்கப் கலைஞர்களையும் அழைத்து வந்து அதன் செலவையும் தயாரிப்பாளர் மேல் போட்டு விடுகிறாராம். இவர் அழைத்து வரும் மேக்கப் கலைஞர்களுக்கு மட்டும் ஒரு நாளைக்ேகு மட்டுமே ரூ.15 ஆயிரம் ரூபாய் வரை சம்பளம் கொடுக்க வேண்டி இருக்கிறதாம். இதை பார்த்து நெட்டிசன்கள், நீங்க இன்னும் சினிமாவில் பெரிதாக வளரவே இல்ல. அதுக்குள்ள இவ்வளவு கண்டிஷன் போடுறீங்களே… எப்பா … தாங்கால… என்று முகம் சுளிக்கின்றனர். சிவாங்கி கொஞ்சம் யோசித்து செயல்பட்டால் சினிமாவில் நிலைக்கலாம் என்பது பல பேரின் கருத்து.