• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிவரும் ராமமூர்த்தி கைது

ByNamakkal Anjaneyar

Jul 31, 2024

திருச்செங்கோட்டை அடுத்த கொக்கராயன்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சிய தறித் தொழில் செய்து வரும் ராமமூர்த்தி 43 என்பவர் கைது செய்து, 30 லிட்டர் ஊறல் 750 மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர். திருச்செங்கோடு அருகே உள்ள மொளசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொக்கராயன் பேட்டை பகுதி அருகே உள்ள காட்டுவளவு பகுதியில் வீட்டிற்கு பக்கத்தில் உள்ள தோட்டத்தில் சாராயம் காய்ச்சிய தறித் தொழில் செய்து வரும் ராமமூர்த்தி 43 என்பவர் கைது. அவரிடம் இருந்து 30 லிட்டர் சாராயம் தயாரிக்க பயன்படும் ஊறல் மற்றும் ஏற்கனவே காய்ச்சி வைத்திருந்த 750 மில்லி சாராயம் பறிமுதல். கள்ளத்தனமாக சாராயம் காய்ச்சியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு மொளசி போலீசார் நடவடிக்கை.