• Wed. Mar 19th, 2025

தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி, 100மாணவிகள் கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை….

ByNamakkal Anjaneyar

Aug 8, 2024

தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி 100 மாணவிகள் கைத்தறி புடவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் 12 மணி நேரம் 2024 முறை கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்கள்.

திருச்செங்கோடு கே எஸ் ஆர் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முதுகலை காஸ்டியூம் டிசைனர் பேஷன் துறை சார்பில் தேசிய கைத்தறி தினத்தை ஒட்டி மாணவிகள் 100 பேர் 100 சேலைகளில் ஒவ்வொரு சேலைக்கும் 20 தேசிய கைத்தறி சின்னத்தை 2024 வருடத்தினை குறிக்கும் வகையில் 2024 என்ற எண்ணிக்கையில் 12 மணி நேரத்தில் வரைந்து உலக சாதனை இந்த சாதனை கிராண்டு யூனிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் பதிவு செய்யப் பட்டது.இதற்கான சான்று வழங்கும் விழா திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனர் அரங்கில் நடைபெற்றது.கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். முன்னதாக இளநிலை இரண்டாம் ஆண்டு ஆடை வடிவமைப்பு மற்றும் தொழிலில் துறை மாணவி மைத்ரேயி அனைவரையும் வரவேற்றார் நிகழ்ச்சியில் பத்திர துறை பதிவாளர் தர்மலிங்கம்கல்லூரியின் அட்மின் இயக்குனர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். கிராண்ட் யூனிவர்ஸ் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ஷேக் முகமது தென்மண்டல இயக்குனர் ஜென்சிங் ஜோவினோதினி நதியா மகேஸ்வரி மோகன் சந்தியா கார்த்திகேயன் ஆகியோர் நடுவர்களாக கலந்து கொண்டனர்.தேசிய கைத்தறி தனத்தை முன்னிட்டு 100 மாணவிகள் கைத்தறி புடவையில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இடைவிடாமல் 12 மணி நேரம் 2024 முறை கைத்தறி சின்னத்தை வரைந்து உலக சாதனை படைத்தார்கள் தேசிய கைத்தறி தின விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் 2024 முறை வரை இந்த புடவையை உடுத்தி கலைத்திறன் மற்றும் பாரம்பரிய கைத்தறி தொழில்நுட்பங்களில் பாதுகாப்பதில் மாணவிகள் தங்கள் பங்களிப்பினை வெளிப் படுத்தினார்கள். சாதனைக்கான சான்று கல்லூரியின் முதல்வர் கார்த்திகேயனிடம் வழங்கப்பட்டது.