• Sun. Jun 21st, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

கிருஷ்ணய்யர் வேதபாடசாலை வளாகத்தில் ராம நவமி மகா திருவிழா..,

Byசோலைஆதி

Mar 30, 2026

சோழவந்தான் அக்ரஹாரத்தில் உள்ள மலையாளம் கிருஷ்ணய்யர் வேதபாடசாலை வளாகத்தில் ராம நவமி மகா திருவிழா ஏழு நாட்கள் நடந்தது. விழாவை முன்னிட்டு லட்சார்ச்சனை ராம நாம பாராயணம் அஷ்டபதி பஜனை உச்சவருத்தி நேற்று காலை பெண்கள் சீர்வரிசை எடுத்து மேளதாளத்துடன் ஊர்வலமாக வீதி சுற்றி வந்தனர்.

தொடர்ந்து வரதராஜபாண்டிட்ஜி, பிரசாந்த்சர்மா உள்பட வேத விற்பனர்கள் கல்யாணத்தை முன்னிட்டு யாக கேள்வி நடத்தி கோஷ்டியார் பக்தி பஜனை சீதா திருக்கல்யாணம் நடந்தது. இதைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் உற்சவம் மற்றும் கோஷ்டியார் பக்தி பஜனை நடைபெற்றது.

இதில் வார்டு கவுன்சிலர் வள்ளிமயில், ஸ்தாபகர் காசிவிஸ்வநாதன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் சந்திரசேகரன், உதவித்தலைவர் மகாதேவன், இணைச்செயலாளர் விஸ்வநாதன் மற்றும் கமிட்டியாளர்கள் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர் அன்னதானம் வழங்கப்பட்டது. சோழவந்தான் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்தனர்.