• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இணையத்தை கலக்கும் ராட்சச மாமனே பாடல்

ByA.Tamilselvan

Oct 21, 2022

பொன்னியின் செல்வன் படத்தின் ராட்சச மாமனே பாடல் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கல்கி எழுதிய புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக இயக்கியுள்ளார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி உட்பட பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் கடந்த மாதம் 30 ம் தேதிவெளியாகி வசூல் சாதனைப் படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இதுவரைரூ.450 கோடியை தாண்டி வசூலித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அந்த படத்தின் பொன்னி நதி, சோழா சோழா ,அலைகடல்,தேவராளன் ஆட்டம் என பாடல்கள் உள்ளன. ஏ.ஆர். ரஹ்மான் ஒவ்வொரு பாடலையும் வித்தியாசமாக ரசிகர்களுக்கு பிடிக்கும் வண்ணம் கொடுத்துள்ளார்.பொன்னியின் செல்வன் பார்த்தவர்களில் யாரும் “ராட்சச மாமனே ராத்திரியின் சூரியனே கோவைப்பழம் போல நீ கோபம் கொள்ளாதே உன் ஆறாம் புத்தி தேர புத்திதான்” என்ற பாடலை மறந்திருக்க வாய்ப்பில்லை. ராட்சஸ மாமனே பாடல் வந்தியத்தேவன் கம்ஸன் வேடம் பூண்ட கிருஷ்ண ஜெயந்திக் கொண்டாட்டத்தில் நாடகமாடியபோது இடம்பெற்றிருக்கும் .படத்தில் வந்தியத்தேவனும் , குந்தவையும் முதன்முறையாக சந்திக்க அமைக்கப்பட்ட இப்பாடல் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இந்த பாடலின் வீடியோ தற்போது வெளியாகி மீண்டும் ஒருமுறை இணையத்தை கலக்கத்தொடங்கியுள்ளது.