• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

மாணவி சத்திய பிரியா கொலை வழக்கு- குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை

ByA.Tamilselvan

Oct 21, 2022

ரயில் முன்பு தள்ளி கொலை செய்யப்பட்ட சத்தியபிரியா கொலை வழக்கில் குற்றவாளி சதீஷ்க்கு அதிகபட்ச தண்டனை பொற்றுக்கொடுக்க போலீசார் முடிவு.
சென்னை ஆலந்தூரை சேர்ந்தவர் கல்லூரி மாணவி சத்தியபிரியா. (வயது23). போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார். அதே குடியிருப்பில் வசித்து வந்த சதீஷ் (23) என்பவர் சத்திய பிரியாவை ஒருதலையாக காதலித்து வந்தார். அவரது காதலை சத்திய பிரியா ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த சதீஷ் கடந்த 13-ந்தேதி பரங்கிமலை ரெயில் நிலையத்தில் மாணவி சத்தியபிரியாவை மின்சார ரெயில் முன்பு தள்ளி கொலை செய்தார். இந்த கொலை தொடர்பாக வாலிபர் சதீசை ரெயில்வே போலீசார் கைது செய்தனர்.
மாணவி சத்தியபிரியா கொலை வழக்கு விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். மாணவி கொலையில் கைது செய்யப்பட்டுள்ள சதீசுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க முடிவு செய்துள்ளனர் .சிறையில் உள்ள சதீசை 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க கோரி சைதாப்பேட்டை கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்தனர். தீபாவளி முடிந்த பிறகு இந்த மனு விசாரணைக்கு வர உள்ளது. போலீஸ் காவலுக்கு அனுமதி அளித்ததும் இந்த வழக்கு விசாரணை தீவிரம் அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.