
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் நேரு பவனத்தில் வைத்து முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி 34வது நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

அன்னாரது திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் ரெங்கசாமி தலைமையில், நகரத் தலைவர் சங்கர் கணேஷ், முன்னாள் மாவட்ட தலைவர் தளவாய் பாண்டியன், முன்னிலையில், நகர் மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், சிமெண்ட் நாகரத்தினம் , டைகர் சம்சுதீன், ஐ என் டி யு சி தொழிற்சங்க தலைவர் பிரபாகரன், வெங்கட்ராமன்,பசும்பொன்,பால்கனி, உட்பட நிர்வாகிகள், தொண்டர்கள் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.
