தமிழ் சினிமாவில் கோலமாவு கோகிலா படமூலமாக இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன் திலீப் குமார். இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கினார், இரண்டு படமும் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து பீஸ்ட் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கடந்த 13-ஆம் தேதி வெளியானது. ஆனால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றே கூறவேண்டும். இப்படி கலவையான விமர்சனத்தை பீஸ்ட் படம் பெற்று வரும் நிலையில், ரஜினிகாந்த் பீஸ்ட் படத்தை பார்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ரஜினி பீஸ்ட் படத்தை பார்த்து விட்டு அடுத்தாக நெல்சன் இயக்கவிருக்கும் படத்தின் வாய்ப்பை வேறொரு இயக்குனரிடம் கொடுக்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் திலீப்குமாரை நம்பி தலைவர் 169 படத்தை தொடங்கலாமா இல்லை வேறு இயக்குநரை இயக்க வைக்கலாமா என்ற முடிவை ரஜினியிடமே விட்டுவிடலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களாம்.
ஆனால் இது வதந்தி தகவல் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகிறார்கள். மற்றோரு தரப்பினர் பீஸ்ட் படத்திற்கு கிடைத்த விமர்சனங்களை பாசிட்டிவாக எடுத்துக்கொண்டு நெல்சன் அடுத்த படத்திலாவது கதையிலும், திரைக்கதையிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறிவருகிறார்கள்.