• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீதேவியை பெண் கேட்டு சென்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

Sridevi

தமிழ் திரையுலகில் அறிமுகமானாலும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அனைத்து மொழி படங்களிலும் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி. அவர் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த போது கோலிவுட் முதல் பாலிவுட் வரை பல நடிகர்கள் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது தெரியவந்துள்ளது.

Sridevi

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், ஸ்ரீதேவியும் இணைந்து மூன்று முடிச்சு, ப்ரியா, போக்கிரி ராஜா, அடுத்த வாரிசு, தாயில்லாமல் நானில்லை, தர்ம யுத்தம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும், ஜுல்ம் கீ ஜன்ஜீர், சால்பாஸ், சோர் கே கார் சோர்னி ஆகிய இந்தி படங்களிலும் நடித்துள்ளனர். ஜானி படத்தில் இருவரும் நடித்துக் கொண்டிருந்த சமயத்தில் ஸ்ரீதேவி மீதான தனது விருப்பத்தை ரஜினிகாந்த் இயக்குநர் மகேந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

மகேந்திரனும் ஷூட்டிங் முடிந்து ஸ்ரீதேவி வீடு திரும்பும் போது ரஜினி அவரை திருமணம் செய்து கொள்ள விரும்பும் செய்தியை தெரிவித்துள்ளார். உடனே ஸ்ரீதேவி வீட்டிற்கு வந்து அம்மாவிடம் பேச சொல்லியுள்ளார். ஒருநாள் மாலை நேரத்தில் ரஜினி, மகேந்திரன் ஆகியோர் ஸ்ரீதேவி வீட்டிற்கு பெண் கேட்டு சென்றுள்ளனர். அப்போது பெண் பார்க்கும் படலமும் அரங்கேறியதாக கூறப்படுகிறது. அந்த நேரம் பார்த்து பவர் கட்டாகியுள்ளது, இதனால் மன சஞ்சலம் அடைந்த ஸ்ரீதேவியின் தாயார், ரஜினிக்கு பெண் கொடுக்க முடியாது என சொல்லிவிட்டாராம். இதனால் தான் ரஜினி – ஸ்ரீதேவி திருமணம் நடக்காமல் போனதாக கூறப்படுகிறது.