சிவகாசியில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகையை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி,
மோசடி வழக்கில் தன்னை கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள்.

நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களை விடுதலை செய்து விடுகிறோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். என்னை தனிமை சிறையில் அடைத்து என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். நான் எதற்கும் கட்டுப்படவில்லை.
செத்தாலும் சாவேன் அதிமுகவை காட்டிக் கொடுக்க மாட்டேன் என்ற நிலைப்பாட்டில் தான் இருந்ததாகவும், சிறைக்குள் சிறை என தனிமைச் சிறையில் இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்திருந்தார்கள்.
சிறையில் ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது. எதற்கும் நான் அஞ்சவில்லை. எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சார முகமாகத்தான் இருப்பதால் தன்னை குறி வைக்கிறார்கள்.
கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை என கண்ணீர் மல்க பேசிய முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி,
யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில் தான் போட்டியிடுவேன் என கண்ணீர் விட்டு அழுதபடி பேசிய ராஜேந்திர பாலாஜி என்னை இரு முறை அமைச்சராகிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன் என சூளுரைத்தார்.
 
                               
                  












 
              ; ?>)
; ?>)
; ?>)