இன்னிங்ஸின் நான்காவது பந்திலேயே ராஜஸ்தான் அணியின் தோல்வி உறுதியானது. முந்தைய போட்டியில் அபாரமாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற வைபவ் சூர்யவன்ஷி டக் அவுட் ஆனதே அதற்கு காரணம். அவரைத் தொடர்ந்து வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் வரிசையாக ஆட்டமிழந்ததால், ராஜஸ்தான் அணி தொடரில் இருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டது.
மும்பை நிர்ணயித்த 218 ரன்கள் இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் மும்பை அணிக்கு எதிராக 100 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் தோல்வியடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பிறகு இந்தத் தொடரில் இருந்து வெளியேறும் இரண்டாவது அணி ராஜஸ்தான். இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக ஆறாவது வெற்றியைப் பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது.

மும்பை நிர்ணயித்த 218 ரன்களை எதிர்கொண்டு பதிலுக்கு ஆடிய ராஜஸ்தான் அணி பவர் பிளேவிலேயே ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. 4.5 ஓவர்களில் 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்ற மோசமான நிலையில் இருந்தது. 27 பந்துகளில் 30 ரன்கள் எடுத்த ஜோஃப்ரா ஆர்ச்சர் தான் ராஜஸ்தான் அணியின் அதிகபட்ச ஸ்கோரர். வைபவ் சூர்யவன்ஷி (0), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (6 பந்துகளில் 13), நிதிஷ் ராணா (11 பந்துகளில் 9), ரியான் பராக் (8 பந்துகளில் 16), துருவ் ஜூரெல் (11 பந்துகளில் 11), ஷிமோன் ஹெட்மயர் (0), மஹேஷ் தீக்ஷனா (9 பந்துகளில் 2), குமார் கார்த்திகேயா (4 பந்துகளில் 2), ஆகாஷ் மத்வால் (9 பந்துகளில் 4*) ஆகியோர் மற்ற பேட்ஸ்மேன்களின் ஸ்கோர்கள்.
கடைசி விக்கெட்டுக்கு ஆர்ச்சர் போராடியதால் தான் ராஜஸ்தான் ஸ்கோர் 100ஐ தாண்டியது. மும்பை அணி சார்பில் ட்ரெண்ட் போல்ட் மற்றும் கன் ஷர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஜஸ்பிரித் பும்ரா 2 விக்கெட்டுகளையும், தீபக் சாஹர் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அனைத்துபேட்ஸ்மேன்களும் அதிரடியாக ஆடியதே அதிக ஸ்கோர் குவித்ததற்கு காரணம். டாஸ் தோற்று முதலில் பேட் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்கள் எடுத்தது. ரயான் ரிக்கிள்டன் (38 பந்துகளில் 61) மற்றும் ரோஹித் சர்மா (36 பந்துகளில் 53) ஆகியோர் தொடக்கத்திலேயே அதிரடி காட்டினர்.
பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் (23 பந்துகளில் 48) மற்றும் கேப்டன் ஹார்திக் பாண்டியா (23 பந்துகளில் 48) ஆகியோர் சிறப்பான ஃபினிஷிங்கை கொடுத்தனர். ஜெய்ப்பூரில் ஒரு ஐபிஎல் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2023ல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.
இன்னிங்ஸின் தொடக்கத்தில் நிதானமாக ஆடிய மும்பை ஓப்பனர்கள் நிலைத்த பிறகு அதிரடியாக விளையாடினர். பவர் பிளேயில் மும்பை அணி 58 ரன்கள் எடுத்தது. ரயான் ரிக்கிள்டன் இன்னிங்ஸில் 3 சிக்ஸர்கள் மற்றும் 7 பவுண்டரிகள் அடங்கும். ரோஹித் சர்மா 9 பவுண்டரிகள் அடித்தார்.
இந்த ஜோடியை 12வது ஓவரில் ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் பிரித்தார். அடுத்த ஓவரிலேயே ரிக்கிள்டனை மஹேஷ் தீக்ஷனா வெளியேற்றினார். ஆனால் பின்னர் வந்த சூர்யகுமார் யாதவ் மற்றும் ஹார்திக் பாண்டியா ஆகியோர் அதிரடியைத் தொடர்ந்ததால் மும்பை அணி ஒரு பெரிய ஸ்கோரை நோக்கி விரைவாக சென்றது. சூர்யகுமார் 3 சிக்ஸர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடிக்க, ஹார்திக் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகள் அடித்தார்.
 
                               
                  












; ?>)
; ?>)
; ?>)