இராஜபாளையம் தொகுதியில் இன்று (22.03.2025) காலை
இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம் இளந்திரைகொண்டான் ஊராட்சி அம்மையப்புரம் கிராமத்தில் 28 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் தலைமையில் பூமி பூஜை நடைபெற்றது. இந்நிகழ்வில் ஒப்பந்ததாரர்களை அழைத்து தரமாகவும் விரைவிலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து தர வேண்டுமென கேட்டுக்கொண்டார்,

அதனைத்தொடர்ந்து அம்மையப்பபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் நேரில் சென்று குழந்தைகளுடன் உரையாடினார், மேலும் பள்ளி சார்பாக பள்ளிக்கு வரும் பாதையில் சிறுபாலத்துடன் பேவர் பிளாக் தளம் அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர்,, உடனடியாக வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களை சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் அழைத்து விரைவில் மதிப்பீடு தயார் செய்து பணியை தொடங்க நடவடிக்கை மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர் வசந்தகுமார் கிளர்க் சீனிவாசன் மாவட்ட மீனவரணி அமைப்பாளர் நவமணி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் மாரிமுத்து ஒன்றிய துணை செயலாளர் மலர்மன்னன் கிளைச்செயலாளர் முருகன் ஒப்பந்ததாரர் அக்ரோ ராமச்சந்திரன் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.