• Sun. Dec 7th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் மாரியம்மன் கோயில் பூக்குழி

ByN.Ravi

May 1, 2024

ராஜபாளையம் அருகே, சங்கரபாண்டியபுரம் பிரசித்தி பெற்ற அருள்மிகு பூ மாரியம்மன் கோவில் சித்திரை மாத பூக்குழி திருவிழா 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் அலகு குத்தி, தீச்சட்டி, குழந்தைகளுடன் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள சங்கரபாண்டியபுரத்தில், அமைந்துள்ள 250 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு பூ மாரியம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் பூக்குழி நடத்துவது வழக்கம்.
இந்த ஆண்டில், கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கியது. இந்த திருவிழாவின் போது10 நாட்கள் பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் செய்யப்பட்டு பூமாரி அம்மன் பல்வேறு சப்பரங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்று. விழாவில், முக்கிய திருவிழாவான பத்தாம் நாள் பூக்குழி திருவிழா இன்று அதிகாலையில் அருள்மிகு பூ மாரியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி சங்கரபாண்டியபுரம், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி ஆகிய பகுதிகளில் வீதி உலா நடைபெற்றது. பின்னர், பூமாரியம்மன் கோவில் பூக்குழி திடலுக்கு வந்தடைந்தது.
சப்பரத்தின் பின் வரிசையாக வந்த பக்தர்கள் வில்லிசை ஒலிக்க மருளாடி அருளாடி ஒருவர் பின் ஒருவராகபூக்குழி இறங்கிய பக்தர்கள் கரகம், தீச்சட்டி ஆயிரங்கண் பானை சுமந்தும் 6 முதல் 7 அடி 8 அடி வரை அலகு குத்தியும். தீச்சட்டி ஏந்தியவாறு பூக்குழி இறங்கி நேர்த்திகடனை செலுத்தினார்கள். ஏராளமான பக்தர்கள், சாமி தரிசனம் செய்தனர்.
கோயில் நிர்வாக கமிட்டினர் சிறப்பாக செய்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை, ராஜபாளையம் டிஎஸ்பி அழகேசன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.