• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

2வது நாளும் இப்படியா?.. ராஜபாளையம் அரசு பள்ளியில் நடந்த அதிர்ச்சி!

ராஜபாளையம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளியில் இரண்டாவதாக ஆசிரியை ஒருவருக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே மேலப்பாட்டம் கரிசல்குளத்தில் உள்ள திருவள்ளுவர் நகர் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பள்ளியைச் சேர்ந்த ஆசிரியை ஒருவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற பரிசோதனையில் மற்றொரு ஆசிரியைக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இரண்டாவது நாளாக பள்ளி முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் விடுபட்ட மாணவர்கள் கொரோனா பரிசோதனை செய்யும் பணி நடைபெற்று வருகிறது.