• Tue. Jun 23rd, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, புத்தாடை வழங்கிய ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்..!

ByKalamegam Viswanathan

Nov 5, 2023

ராஜபாளையம் தனியார் மஹாலில் கலைஞர் நூற்றாண்டு தினத்தை போற்றும் வகையிலும் தீபாவளி திருநாளை முன்னிட்டும் ராஜபாளையம் சட்டமன்ற தொகுதி உட்பட்ட 1000 மேற்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடை இனிப்பு வழங்கிய ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தென்காசி சாலையில் அமைந்துள்ள தனியார் மஹாலில் ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் எஸ். தங்கபாண்டியன் தலைமையில் கலைஞர் நூற்றாண்டு தினத்தை போற்றும் வகையிலும் தீபாவளிக்கு பண்டிகை வருகையொட்டி தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் இராஜபாளையம் சட்ட மன்ற தொகுதியில் கொரோனா காலத்தில் சிறப்பாகவும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றிய ஒன்றிய நகர பேரூர் பகுதிகளை சார்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் கூறிய சட்டமன்ற உறுப்பினர் எஸ் தங்கப்பாண்டியன்.

பின்னர் அவர்களை மேடைக்கு அழைத்து மாலை அணிவித்து மரியாதை செய்து புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கி கௌரவித்தார்.

மேலும் ராஜபாளையம் நகராட்சி பேரூராட்சி ஊராட்சிகளை சார்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் யூனியன் சேர்மன் சிங்கராஜ் நகராட்சி சேர்மன் பவித்ரா நகரச் செயலாளர்கள் மணிகண்ட ராஜா ராமமூர்த்தி உட்பட நகர பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு ராஜபாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துக்கள் கோரி புத்தாடை மற்றும் இனிப்பு வழங்கினர்.