தேசியத்தையும் தெய்வீகத்தையும் இரண்டு கண்களாக பாவித்தவர் மகாகவி பாரதியார் என்று அவரது நினைவு நாளில் ரோட்டரி முன்னாள் ஆளுநர் ராஜா கோவிந்தசாமி புகழாரம் சூட்டினார்

மகாகவி பாரதியாரின் 125 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை பாரதி யுவகேந்திரா அமைப்பு சார்பில் நினைவஞ்சலி நிகழ்ச்சி பாரதி பணியாற்றிய பெருமை படைத்த மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். நிகழ்ச்சிக்கு ஆடிட்டர் சேது மாதவா தலைமை தாங்கினார். சேதுபதி மேல்நிலைப்பள்ளி தாளாளர் வழக்கறிஞர் பார்த்தசாரதி டாக்டர் ரேவதி ஜானகிராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் மகாகவி பாரதியாரின் திருவுருவ சிலைக்கு ரோட்டரி முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி மாலை அணிவித்து 25 பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி மூட்டையினை வழங்கி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது

தனி ஒருவருக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதி
அதன்படி பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு அவர்கள் தலைமையில் இன்றைக்கு பார்வையற்ற மாற்றுத்திறனாளி மக்களுக்கு 10 கிலோ அரிசி என 25 பேருக்கு வழங்கினார். அந்த வகையில் அவருடைய வாக்கை நிரூபிக்கும் வகையில் செய்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் மேல் பாரதி கொண்டிருந்த அன்பும் அவருடைய உலகளாவிய நோக்கம் பாராட்ட தகுந்தது. ஒவ்வொரு நாட்டிலும் ஏற்பட்ட புரட்சிகளைப் பற்றி தன்னுடைய சிந்தனைகளை கவிதையாக படைத்துள்ளார். சிறந்த மொழிபெயர்ப்பாளராக, ஆங்கில புலமையும் கொண்டிருந்தவர் அவர். தேசிய உணர்வையும் தெய்வீக உணர்வையும் இரண்டு கண்களாக பாவித்தவர் பாரதியார். அருணகிரிநாதர், ஆண்டாள், நம்மாழ்வார் ஆகியோர் பற்றி எழுதிய கவிதைகளையும், அவர் ஆங்கிலத்தில் கும்மியடி தமிழ்நாடு முழுவதும் குலுங்கிட கும்மியடி என்று சொன்ன அந்த கவிதை வரிகளை ஆங்கிலத்திலே அதே சந்தத்தில் அவர் மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறார்.

அவருடைய மொழி உணர்வையும் மொழி புலமையையும் பார்க்கிறபோது உலகின்பால் அவர் வைத்திருந்த பெரும் நம்பிக்கை யையும் இந்த நாளில் நினைவு கூறுகிறோம் .
இவ்வாறு ரோட்டரி முன்னாள் ஆளுநர் பேராசிரியர் ராஜா கோவிந்தசாமி பேசினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மதுரை பாரதி யுவகேந்திரா கேந்திரா நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.








