• Thu. Apr 25th, 2024

கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் மழைநீர்…

Byகாயத்ரி

Nov 11, 2021

சென்னை கே.கே.நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதி அடைந்துள்ளனர்.


சென்னையில் நேற்று மாலை முதல் இரவு முழுக்க கனமழை கொட்டித் தீர்த்ததால் தலைநகரின் பெரும்பகுதி மீண்டும் வெள்ளக்காடாக மாறியுள்ளது.


வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால் நேற்று மாலை முதல் சென்னையில் இடைவெளியில்லாமல் தொடர் மழை பெய்து வருகிறது.


வடபழனி, கோடம்பாக்கம், தியாகராய நகர், நுங்கம்பாக்கம், கிண்டி, அடையாறு, வில்லிவாக்கம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது.


அதிகபட்சமாக தாம்பரத்தில் 21 செ.மீ மழையும், எண்ணூர் துறைமுகம் பகுதியில், 14.6 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. எம்.ஆர்.சி.நகரில் 12 சென்டிமீட்டர் அளவுக்கும், வில்லிவாக்கத்தில் 10 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை பதிவாகியுள்ளது.


தரமணியில் 11 சென்டிமீட்டர் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கே.கே.நகரிலுள்ள அரசு புறநகர் மருத்துவமனைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் நோயாளிகளும், உடனிருப்பவர்களும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *