• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

சூறாவளி காற்றுடன் மழை.., வாழை மரங்கள் சாய்ந்து சேதம்…

அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் சூறாவளி காற்றுடன் மழை காரணமாக சுமார் 5,000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து சேதமாகி, பல லட்ச ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே சிதம்பராபுரம் கிராமத்தில் சுமார் 1000 ஏக்கருக்கு மேலாக வாழை விவசாயம் நடைபெற்று வருகிறது. அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென பலத்த சூறாவளி காற்றுடன் கூடிய‌ மழை பெய்தது. இந்நிலையில் இந்த சூறாவளி காற்றுடன் பெய்த மழை காரணமாக சிதம்பரபுரம் கிராமத்தில் சுமார் 5,000 திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் அப்படியே காற்றில் சாய்ந்து கீழே விழுந்தது.

இதில் பெரும்பாலான வாழை மரங்கள் குலை தள்ளிய நிலையில் அப்படியே சாய்ந்து அனைத்தும் நாசம் அடைந்துள்ளது. வாழை குலைகள் பிஞ்சாக இருப்பதால் இதனால் எந்த பயனும் இல்லை என விவசாயிகள் தெரிவித்தனர். ஏக்கருக்கு பல ஆயிரம் செலவு செய்து நேற்று பெய்த சூறாவளி காற்று காரணமாக மிகுந்த நஷ்டம் அடைந்துள்ளதாகவும் அரசாங்கம் தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.