• Tue. Mar 3rd, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 14 மாவட்டங்களில் இன்று மழை

Byகாயத்ரி

Sep 8, 2022

வட தமிழக பகுதிகளை ஒட்டி நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு , காஞ்சிபுரத்தில் மிதமான மழை பெய்யக்கூடும், விழுப்புரம் ,கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேபோல் ராமநாதபுரம், புதுக்கோட்டை ,தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், நீலகிரி மாவட்டங்களிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.