• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ராகுல் பாதுகாப்பில் குளறுபடி… எச்சரிக்கும் காங்கிரஸ்!!

ByA.Tamilselvan

Dec 29, 2022

ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை யாத்திரையில் பாதுகாப்பு குளறுபடி நடந்ததாக கூறி காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் கே.சிவேணுகோபால் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
கடந்த 24ஆம் தேதி ராகுல் நடைபயணம் டெல்லிக்குள் நுழைந்த போது பலமுறை பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுபடுத்தும் பணியில் டெல்லி காவல்துறை தோல்வி அடைந்தது என குற்றம் சாட்டியுள்ளார்.
z+ பாதுகாப்பு உள்ள ராகுல் காந்திக்கு, காங்கிரஸ் தொண்டர்களே அரண் அமைத்து பாதுகாப்பு வழங்கியதாகவும், ஹரியான மாநிலத்தில் பாரத் ஜோடா யாத்திரைக்கு பயன்படுத்தபட்டு வரும் கண்டெய்னர்களில் மாநில உளவு பிரிவு அத்துமீறி நுழைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். வரும் நாட்களில் காஷ்மீரில் நடைபயணத்தை தொடங்க உள்ளதால் ராகுல் காந்திக்கு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும். மத்திய அரசு பழிவாங்கும் அரசியலில் ஈடுபடாமல் காங்கிரஸ் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுகொண்டுள்ளார்.