நாடாளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் 55வது பிறந்தநாள் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினரால் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ராகுல் காந்தியின் பிறந்த நாள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.

கோட்டுச்சேரி நெடுங்காடு சட்டமன்ற தொகுதி சார்பில் தொகுதி தலைவர் மாறன், மாநில செயலாளர் ஜெயசீலன் ஏற்பாட்டில் ராகுல் காந்தியின் பிறந்தநாளை ஒட்டி மாபெரும் எழுச்சி பேரணி நடைபெற்றது. பூவம் மாரியம்மன் கோவிலில் இருந்து தொடங்கிய பேரணியை தொகுதியின் செயல் தலைவர் சுப்பராயன் தொடங்கி வைத்தார். இப்பேரணையில் முன்னாள் புதுச்சேரி மாநில தலைவர் ஏவி.சுப்பிரமணியன், மாவட்ட தலைவர் சந்திரமோகன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரஞ்சித், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி நிர்மலா உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர்.
முக்கிய வீதிகள் வழியாக வந்த பேரணி கோட்டுச்சேரி கடை வீதியில் நிறைவுற்றது பேரணையின் போது ராகுல் காந்தியை வாழ்த்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.