• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரியில் தன் நடைபயணத்தை நாளை தொடங்கும் ராகுல்காந்தி…

Byகாயத்ரி

Sep 6, 2022

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி நாளை கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை தொடங்க இருக்கும் நிலையில் கன்னியாகுமரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கன்னியாகுமரியில் நாளை நடை பயணம் தொடங்க இருப்பதை அடுத்து ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார். இதனை அடுத்து சென்னை விமான நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத் தேர்தலை சந்திக்கும் வகையிலும் குஜராத் உள்ளிட்ட மாநில சட்டசபை தேர்தலை சந்திக்கும் வகையிலும் இந்த நடைபயணம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த பயணம் தரும் எழுச்சி காரணமாக காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.