• Sat. May 9th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

ராகுல் காந்தி இன்று மாலை சென்னை வருகை

ByA.Tamilselvan

Sep 6, 2022

கன்னியாகுமரியில் நாளை பாதயாத்திரையை துவங்கும் ராகுல்காந்தி இன்று மாலை சென்னை வருகிறார்.காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கன்னியாகுமரியில் நாளை(புதன்கிழமை) பாதயாத்திரையை தொடங்குகிறார். இதற்காக இன்று இரவு 8 மணியளவில் சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேருகிறார். சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. சென்னையில் இரவு தங்கும் ராகுல் காந்தி, நாளை காலையில் சென்னையில் இருந்து காரில் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் அங்கிருந்து மீண்டும் காரில் சென்னைக்கு திரும்பி வருகிறார். காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து பயணிகள் விமானத்தில் ராகுல்காந்தி திருவனந்தபுரம் புறப்பட்டு செல்கிறார்.