காங்கிரஸ் தொடர் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம் என குலாம்நபி ஆசாத் குற்றச்சாட்டு.
காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்பட காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். காங்கிரஸ் பிரசார குழு தலைவர் பதவியை ஏற்கனவே நிராகரித்த நிலையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில், கட்சியில் இருந்து விலகுவதாக குலாம்நபி ஆசாத் அறிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் கடிதம் எழுதியுள்ளார். மேலும் அவர், 2014-ம் ஆண்டு தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தோல்விக்கு அரசியலில் ராகுல் காந்தியின் முதிர்ச்சியின்மையே காரணம். காங்கிரசில் முக்கிய முடிவுகள் அனைத்தும் ராகுல் அல்லது அவரது உதவியாளர்களால் எடுக்கப்படுகிறது என்று குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரசில் இருந்த கலந்தாலோசனை வழிமுறையை ராகுல் காந்தி முற்றிலும் அழித்துவிட்டார்.
காங்கிரஸ் தொடர் தோல்விக்கு ராகுல்காந்தியே காரணம்- குலாம்நபி ஆசாத்
