• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக ராகுல் காந்தி மீது வழக்கு!

ByP.Kavitha Kumar

Jan 20, 2025

தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..

டெல்லியில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

இவ்விழாவில் பேசிய ராகுல் காந்தி, ‛‛நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்’’ என்றார்.

இந்த பேச்சை பாஜக தலைவர்கள் கடும் விமர்சனம் செய்தனர். மேலும், அசாம் மாநிலம் குவஹாட்டியில் உள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் மோன்ஜித் சேத்தியா என்பவர் ராகுல் காந்தி மீது புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191 (1) (தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுதல்) என்று 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.