இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் கான்பூரில் இன்று தொடங்குகிறது. இருபது ஓவர் தொடரை வென்ற உற்சாகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது.
கான்பூர் கிரீன்பார்க் மைதானத்தில் இன்று முதல் டெஸ்ட்டில் நியூசிலாந்து அணியை இந்திய அணி எதிர்கொள்ளும் நிலையில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் வீரர்களுக்கு பந்துவீசியுள்ளார்.
அவர் ஆஃப் ஸ்பின் வீசி அசத்திய வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.இந்திய அணிக்கு ஆடிய போது அவ்வளவாக பவுலிங் வீசாத ராகுல் ட்ராவிட் நேற்று வலையில் ஆஃப் ஸ்பின் வீசினார். இந்திய கிரிக்கெட் டீம் சோஷியல் மீடியா ராகுல் ட்ராவிட் பந்து வீசிய வீடியோவை வெளியிட்டுள்ளது. விலைமதிப்பற்றதாகப் பார்க்கப்படும் இந்தத் தருணம் ரசிகர்களிடையே பேசுபொருளாகியுள்ளது.