ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி திருக்கோயிலில் ராகு பகவான் மீன ராசியிலிருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் வாக்கிய பஞ்சாங்க ரீதியாக கிரக பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு, இங்கு நவகிரகங்களுடன் எழுந்தருளி உள்ள ராகு கேது பகவானுக்கு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு யாகசாலை அமைக்கப்பட்டு பூரண கும்பம் வைத்து நான்கு வேதங்கள் ஓதப்பட்டது.

தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. ராகு கேது பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் சிறப்பு பூஜைகள் தீபாரதனை நடைபெற்றது. கோவில் சிவாச்சாரியார்கள் ரகு என்ற கைலாச பட்டர் ரமேஷ் என்ற சுவாமிநாத பட்டர், கல்யாண விக்னேஷ் பட்டர், ஆனந்த விஜய் பட்டர், தியாகராஜ பட்டர், வைத்தியநாத பட்டர் ஆகியோர் பூஜைகளை சிறப்பாக நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜைகள் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் சௌ.சக்கரை அம்மாள் கோயில் செயல் அலுவலர் செ. முத்து மணிகண்டன் மற்றும் கோயில் அலுவலர்களும் திருக்கோயில் பணியாளர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.