• Wed. Mar 4th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு உபகரணங்கள் வழங்கிய ஆர்.பி.உதயகுமார்..,

ByP.Thangapandi

Jul 16, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எருமார்பட்டியில் முன்னாள் முதல்வரும் கழக பொதுச்செயலாளரும் எதிகட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு 100 கோவில்களில் வழிபாடு, 100 கிராமங்களில் அன்னதானம் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் கலந்து கொண்டு, முத்தாலம்மன், சந்தனமாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்து அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.,

இதில் உசிலம்பட்டி முன்னாள் எம்எல்ஏ வும் ஒன்றிய செயலாளருமான பா.நீதிபதி, மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரை தனராஜ், மாநில இளம் பெண்கள் பாசறை துணைச்செயலாளர் இளஞ்செழியன், நகரசெயலாளர் பூமாராஜா மற்றும் அதிமுக முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.