• Thu. Feb 5th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

விளையாட்டு உபகரணங்களை வழங்கிய ஆர்.பி.உதயகுமார்..,

ByP.Thangapandi

Jun 21, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட கட்டக்கருப்பன்பட்டியில் முன்னாள் முதல்வரும் பொதுச்செயலாளரும் எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டும், மீண்டும் முதல்வராக வேண்டி 100 கோவில்களில் வழிபாடு மற்றும் 100 கிராமங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சரும் எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி.உதயக்குமார் பங்கேற்று கட்டக்கருப்பன்பட்டியில் உள்ள பட்டத்தரசியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தி அன்னதானம் மற்றும் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.

இதில் செல்லம்பட்டி ஒன்றிய செயலாளர் ராஜா,கழக அமைப்புச் செயலாளரும் முன்னாள் எம்எல்ஏ வுமான ஐ.மகேந்திரன்,மாநில அம்மா பேரவை துணைச்செயலாளர் துரைதனராஜ்,மாவட்ட மாணவரணிச் செயலாளர் மகேந்திரபாண்டி,மாவட்ட இலக்கிய அணி செயலாளர் ரகு, மாவட்ட கழக துணைச் செயலாளர் உஷாசுந்திரம் மற்றும் அதிமுக முக்கிய நிர்வகைகள் பலர் கலந்து கொண்டனர்.