• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ராணி இரண்டாம் எலிசபெத்-ன் உடல் இங்கிலாந்து வந்தடைந்தது…

Byகாயத்ரி

Sep 14, 2022

இங்கிலாந்து மகாராணியான இரண்டாம் எலிசபெத் தனது 96வது வயதில் கடந்த 8ம் தேதியன்று உயிரிழந்தார். அவரது உடல் சவப்பெட்டியில் வைக்கப்பட்டு கடந்த 11ம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பரோ நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அரச குடும்பத்தினர் மரியாதை செலுத்திய பின் செயிண்ட் கில்ஸ் தேவாலயத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் நேற்று இரவு ஸ்காட்லாந்தில் இருந்து இங்கிலாந்துக்கு விமானம் மூலமாக சவப்பெட்டி கொண்டு வரப்பட்டது. இன்று பிற்பகல் ராணியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக பீரங்கியில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் வைக்கப்படுகிறது. இன்று மாலை முதல் இறுதி சடங்கு நடைபெறும் 19ம் தேதி முதல் பொதுமக்கள் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ராணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தலாம் என கூறப்பட்டுள்ளது.