• Sat. Oct 3rd, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

முதல் இடத்திற்கு வந்தா புஷ்பா பாடல்கள்

உலக அளவில் நாடு, மொழி, இனம் வித்தியாசம் இன்றி பார்க்கும் வீடியோ தளமாக யு டியூப் தான் இப்போதுஇருக்கிறது. இத்தளத்தில் தினமும் லட்சக்கணக்கான வீடியோக்கள் பதிவேற்றப்படுகிறது. உலக சினிமா உலகமே தற்போது யு டியூப் தளத்தைத்தான் தங்களுக்கான இலவச விளம்பர வீடியோ தளமாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறது இதில் முன்னணியில் இருப்பது இந்திய சினிமா வணிக நோக்கத்திற்காக இத்தளத்தில் வெளியிடப்படும் பாடல்கள், டிரைலர்கள் பார்ப்போர், விரும்புபவர்கள் எண்ணிக்கை பயன்படுத்தப்படுகிறது அதனால்.


டீசர்கள், டிரைலர்கள், பாடல்கள் என பலவும் யு டியூப் தளத்தில் பதிவேற்றப்படுகிறது.
தெலுங்கில் சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இயைமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வெளிவந்த படம் ‘புஷ்பா’. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஓ அன்டாவா.. ஓஓ அன்டாவா’ பாடல் யு டியூப் தளத்தில் கடந்த வாரத்தில் உலக அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக இப்பாடல் முதலிடத்தில்தான் உள்ளது. இப்படத்தில் இடம் பெற்றுள்ள மற்றொரு பாடலான ‘சாமி சாமி’ பாடல் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.


ஓ அன்டாவா’ பாடல் தற்போது 90 மில்லியன் பார்வைகளை யு டியூபில் கடந்துள்ளது. தமிழில் 27 மில்லியன் பார்வை, இந்தியில் 16 மில்லியன் பார்வை கன்னடத்தில் 10 மில்லியன் பார்வை மலையாளத்தில் 3 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது.