• Fri. Mar 29th, 2024

குடிமகன்களின் கூடாரமாக மாறி வரும் புளியங்குடி

Byஜெபராஜ்

Mar 24, 2022

தென்காசி மாவட்டம் புளியங்குடி நகர் மன்ற கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி விஜயா சௌந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். ஆணையாளர் குமார் சிங், பொறியாளர் முகைதீன் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுகாதார அலுவலர் ஜெயபால் மூர்த்தி அனைவரையும் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் செல்லத்துரை மற்றும் கடையநல்லூர் நகராட்சி சேர்மன் ஹபிபூர் ரஹ்மான், புளியங்குடி நகரச் செயலாளர் ராஜ்காந்த் நகராட்சி மேலாளர் சண்முகவேல் ஆய்வாளர்கள் பிச்சையா, பாஸ்கர், கைலாஷ், சுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்தில் திமுக வெற்றி பெற்றதற்கு தமிழக முதல்வருக்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் புளியங்குடி பெருமாள் கோவில் முன்பு உயர்மின் கோபுர மின் விளக்கு அமைக்கவும், கோடைகாலம் வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வார்டுகளிலும் பழுதடைந்த ஆழ்துளை கிணறுகள் மின்விசை பம்பு வயரிங் போன்ற பராமரிப்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளவும், சிந்தாமணியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்திடவும் அய்யாபுரத்தில் தேசிய சுகாதார நல மையம் அமைத்திடவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நடந்த விவாதங்கள் 26 வது வார்டு கவுன்சிலர் முகைதீன் அப்துல்லா (மனிதநேய மக்கள் கட்சி) எங்கள் சின்னா நகர் மேற்கு பகுதியில் 15 ஆண்டு காலமாக தீர்வை கட்டி வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் தண்ணீர் இல்லை

ஆணையாளர் :இன்னும் 4 மாதத்தில் கண்டிப்பாக குடிநீர் வந்துவிடும்.
கவுன்சில் முகைதீன் அப்துல்லா :அதுவரை வண்டி மூலமாக தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள். ஆணையாளர் :ஏற்பாடு செய்யப்படும்.

28 வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் :மன்றத்தில் காமராஜர் படமும் தமிழக முதல்வர் ஸ்டாலின் படமும் வைக்க வேண்டும்.
சேர்மன் :அடுத்த கூட்டத்திற்குள் வைக்க ஏற்பாடு செய்யப்படும்.

8வது வார்டு கவுன்சிலர் சமுத்திரம் :ஏற்கனவே இயங்கி வரும் ஊரணிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா .
ஆணையாளர் :மதிப்பீடு செய்து செயல்படுத்தப்படும்.

7வது வார்டு கவுன்சிலர் கார்த்திக் :தண்ணீர் பிரச்சனை வாறுகால் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் இல்லையென்றால் நாங்கள் இங்கே வந்து உட்கார வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். ஆணையாளர் :தண்ணீர் பிரச்சனை இல்லாத நிலையை ஏற்படுத்தி தரப்படும்.

28வது வார்டு கவுன்சிலர் பாலசுப்பிரமணியன் (திமுக) எங்கள் பகுதியில் பால்வாடி கட்டிடம் பாதியில் நிற்கிறது எப்போது சரி செய்து தரப்படும்.
ஆணையாளர்: உடனடியாக சரி செய்து தரப்படும் .

6வது வார்டு கவுன்சிலர் வீரமணி :எங்களது பகுதி வாறுகால் சரி செய்ய வேண்டும் முப்புடாதி அம்மன் கோவில் அருகே குப்பைகள் அள்ளப் படவேண்டும் வாறுகால் போடவில்லை .
ஆணையாளர் :சரி செய்யப்படும்.

22வது வார்டு கவுன்சிலர் முருகன் :புளியங்குடி நகராட்சியை தமிழகத்திலேயே முதன்மையான நகராட்சியாக மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
8 வது வார்டு கவுன்சிலர் உமா மகேஸ்வரி :நகராட்சி சம்பந்தமான கூட்டங்கள் நகராட்சியில் தான் நடத்தபட வேண்டும் அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வரும்போது முன் கூட்டியே எங்களுக்கு தகவல் தரவேண்டும்.
சேர்மன் :நிச்சயமாக தெரிவிக்கப்படும்.

2 வது வார்டு கவுன்சிலர் செலின்சுகிர்தராஜ்:எங்கள் பகுதியில் எல்லா இடங்களிலும் தண்ணீர் வருவதில்லை நிறைய பேர் மோட்டார் வைத்து தண்ணீர் பிடிப்பதால் இந்த நிலையா நான் யாரை தொடர்பு கொள்ள வேண்டும் .
ஆணையாளர் :பொறியாளர் அல்லது பிட்டர் .

16வது வார்டு கவுன்சிலர் சேக் காதர் மைதீன் (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) வலையர்ஊரணி தற்போது குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது சமூக சீர்கேடு ஏற்பட்டுள்ளது அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது அதை சரி செய்ய வேண்டும் அங்கிருக்கும் நீர் தொட்டியை அகற்ற வேண்டும். நகராட்சிக்குள் வருபவர்களை எந்த அலுவலரை சந்திக்க வேண்டும் எது சம்பந்தமாக பார்க்க வேண்டும் என்பதனை கூறும் வகையில் நுழைவு வாயிலில் ஒரு பணியாளரை அமர்த்தவேண்டும் .
ஆணையாளர்: தங்களின் கோரிக்கையை பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு கூட்டத்தில் விவாதம் நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *