புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் நியூட்டன் தலைமையில் போலீசார் காரைக்கால் அடுத்த திருப்பட்டினம் பகுதியில் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சிறிய சரக்கு வாகனத்தில் தமிழக பகுதிக்கு கடத்துவதற்காக மூட்டை மூட்டையாக 500 கிலோ புதுச்சேரி அரசின் இலவச அரிசிகளை வைத்திருந்தது தெரிய வந்தது.

மேலும் அந்த வாகனத்தில் இருந்த நபர்களிடம் போலீசார் விசாரணை செய்ததில் தமிழகப் பகுதியான திட்டசேரியை சேர்ந்த செந்தில்குமரன், குமரேசன் என்று தெரிவித்தார்கள். இதனை அடுத்து உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவினர் தமிழக பகுதிக்கு கடத்த வைத்திருந்த 500 கிலோ புதுச்சேரி அரசின் இலவச ரேஷன் அரிசிகளை பறிமுதல் செய்து இருவரையும் காரைக்கால் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.