கொரோனா தொற்றை சமாளிக்க புதுச்சேரி அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்தநாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கொண்டாடப்பட்டது.

இதனை ஒட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கலைஞர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் ராஜவேலு,அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சாய்.சரவணன் குமார், திமுக எதிர்க்கட்சித் தலைவரும் மாநில திமுக அமைப்பாளருமான சிவா, சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ், பாஸ்கர் என்கிற தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி..
கொரோனா தொற்றை சமாளிக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றார்.
இதற்கு முன்னதாக சுதேசி பஞ்சாலையில் இருந்து திமுக மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் ஊர்வலமாக புறப்பட்ட திமுகவினர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பேட்டி: ரங்கசாமி முதலமைச்சர் புதுச்சேரி
இதேபோன்று வீரம் பட்டினத்தில் நடைபெற்ற கலைஞர் பிறந்தநாள் விழாவில் திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திமுக மாநில அமைப்பாளர் சிவா கலைஞர் கருணாநிதி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் அரியாங்குப்பம் தொகுதி திமுக மாநில மாவட்ட தொகுதி வெளியிட்ட அனைத்து பிரிவு நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.