மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ளது திருமால் நத்தம் கிராமம் இந்த கிராமத்தை அடுத்த திருவேடகம் மற்றும் நெடுங்குளம் செல்லும் வழியில் சுமார் 3 அடி அகலத்திற்கு திடீரென நடுரோட்டில் பள்ளம் விழுந்தது இது குறித்து அந்த பகுதி வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அரசு நிர்வாகத்திற்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாகவே தகவல் தெரிவித்தனர்

இது குறித்து சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டது
மேலும் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் இது குறித்த செய்தி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வந்திருந்தது.
செய்தி வெளிவந்த பின்பாக விழித்துக் கொண்ட வாடிப்பட்டிவட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செல்வி திருவேடகம் ஊராட்சி செயலாளர் சுதா பிரியா மற்றும் பணியாளர்கள் திடீர் ஞானோதயம் ஏற்பட்டு அந்தப் பள்ளத்தில் மரத்தை நட்டனர்.
மேலும் கூடுதலாக அதில் பச்சைத் துணியால் ஆன வேலியை அமைத்தனர். அதில் சிவப்பு கொடி கட்டியது போல் சில துணிகளை பறக்க விட்டனர். நேற்றுமாலை 6:00 மணிக்கு பின்பாக யாருக்கும் தெரியாமல் திடீரென வந்து இச்செயலில் ஈடுபட்டனர்.
. ஒரு மாதத்திற்கு முன்பாகவே பள்ளம் விழுந்த நிலையில் திடீரென ஞானோதயம் ஏற்பட காரணம் என்ன என்று அப்பகுதி பொதுமக்கள் தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டனர்

இருந்தும் எந்த ஒரு வேலையும் செய்யவில்லை. ஆளை விழுங்கும் பள்ளம் அப்படியேதான் உள்ளது இது குறித்து மதுரை மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் பாதுகாப்புடன் விளையாடும் வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் திருவேடகம் ஊராட்சி செயலாளர் ஆகியோரை நேரில் அழைத்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட உள்ளாட்சி பணியாளர்களை அழைத்து ஒரு மாதத்திற்கு முன்பாக பள்ளம் விழுந்த நிலையில் தற்போது வரை ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்று விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர் மேலும் அந்த பள்ளத்தை சரி செய்து வாகன ஓட்டிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிரமம் ஏற்படாத வகையில் முறையாக மாற்றுப் பாதை அமைத்து பாலத்தை கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.




