• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அலங்காநல்லூர் பேரூராட்சியில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் ஊதியம் குறைவாக வழங்குவதாக கூறி, பொதுமக்கள் போராட்டம்

ByN.Ravi

Aug 28, 2024

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சியில், நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் 100 நாள் வேலை பார்த்த விவசாய தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக பேரூராட்சி நிர்வாகம் வழங்குவதாக கூறி, பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்.., அலங்காநல்லூர் பேரூராட்சியில், வார்டு வாரியாக 150 பேருக்கு வேலை வழங்கப்படுகிறது. 150 முதல் 165 நபர்கள் வரை வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு வரை 200 கூலி வழங்கப்பட்டது. ஆனால், இந்த வாரம் ரூ.100 மட்டும் வழங்கப்பட்டுள்ளது. இதனைக் கேட்டால், இவ்வளவுதான் சம்பளம் நீங்கள் பார்த்த வேலைக்கு 50தான் கொடுக்க வேண்டும் ஆனால், நாங்கள் 50 சேர்த்து 100 ரூபாய் கொடுக்கிறோம் என்று பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாகவும், கூறினார்கள். பேரூராட்சி செயல் அலுவலர் பணி மாற்றம் செய்யப்பட்டு சென்று விட்டதால் அதிகாரி இல்லை என்று கூறினார்கள். அதன் பின்னர் அங்கு வந்த வாடிப்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், பொதுமக்களிடம் கூலி குறைவாக கொடுத்ததாக புகாருக்கு உள்ளான அதிகாரி வெளியூர் சென்று உள்ளதால் ,
வந்த பின்னர் விசாரணை செய்து கூலி குறித்து குளறுபடிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
மேலும், பொதுமக்கள் கூறுகையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலை அட்டையை பேரூராட்சி நிர்வாகமே வைத்துக் கொண்டு மக்களிடம் வழங்க மறுக்கிறது. அட்டையை மக்களிடம் வழங்க வேண்டும் என்றும், அதேபோல் வேலை வழங்கும் நாள் அன்று காலையில்தான் வேலை இருப்பதாக மக்களுக்கு தெரிவிக்கின்றனர். எனவே, அலங்காநல்லூர் பேரூராட்சியில், நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தில் நடக்கக்கூடிய குளறுடிகளை உடனடியாக கண்டறிந்து, மாவட்ட ஆட்சியர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.