திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே அரசு பேருந்து சிறைப்பிடித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே வீரசின்னம்பட்டியில் தாமதமாக வந்த அரசு பேருந்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர.

அரசு அலுவலர்கள் அருவனுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உரிய நேரத்தில் செல்ல முடியாததால் பள்ளி மாணவ மாணவிகள் அவதிப்பட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் அரசு பஸ்சை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை முதல் குறித்த நேரத்திற்கு பேருந்து வரும் என உறுதி அளித்ததை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.