

நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருந்தனர். இந்த நிலையில் நாகை நகரப் பகுதியில் செயல்பட்டு வந்த அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரத்தூர் பகுதிக்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது.

இந்த கிராமத்தில் இதுவரை அரசு மதுபான கடை இல்லாமல் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று திடிரென புதிதாக அரசு மதுபான கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான கடையை நிரந்தரமாக மூடக்கோரி ஒரத்தூர் கிராமத்தில் உள்ள கிராமப் பெண்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு கடையை முற்றுகையிட்டு கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் , திடீரென மருத்துவ கல்லூரி இயங்கும் பகுதியில் அரசு மதுபான கடையை திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பெண்கள் தரையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். கடை திறக்கும் நேரத்தில் கிராமப் பெண்கள், பொதுமக்கள் கடகையை முற்றுகையிட்டு கடையை திறக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.
மேலும் கடைக்குள் போராட்டக்காரர்களை அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் பெண்கள் கடைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அப்பகுதி பெண்கள் கூறும் போது அரசு மருத்துவக் கல்லூரி இயங்கும் பகுதியில் திடீரென டாஸ்மாக் கடையை திறந்து இருப்பது பொது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும்.
மேலும் தற்போது திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடை அரசு கட்டிக்கொடுத்துள்ள குடியிருப்பு வீடு எனவும், வெளி மாநில, மாவட்டங்களில் இருந்து மாணவ, மாணவிகள் மருத்துவம் படிக்கும் நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு கேள்வி குறியாகும் எனவும் குற்றம் சட்டம் அப் பகுதி பெண்கள் இங்கிருந்து டாஸ்மாக் கடையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என கோரிக்கை வைத்த அவர்கள் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கவில்லை.
சாலை மறியல் போராட்டம், தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி பெண்கள் , பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு பேராட்டத்தில் ஈடுப்பட்டதால் போலிசார் குவிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டது.

