• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்த மாணவர்கள்..,

ByR. Vijay

May 16, 2025

சர் ஐசக் நியூட்டன் மெட்ரிகுலேஷன் பள்ளி 10 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், செல்வன் கரிஷ் S – 484/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதலிடம் பெற்று தனக்கும் பள்ளிக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

செல்வன். K.புவனேஷ் – 474/500 மற்றும் சதீஷ். J -474/500 மதிப்பெண்கள் பெற்று இருவரும் இரண்டாவது இடத்தையும், செல்வன் நிதிஷ் P. – 468/500 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடத்தில் இருக்கின்றார்கள். 25 மாணாக்கார்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று உள்ளார்கள். இது இவர்களுடய இலக்கையும் விடாமுயற்சியையும் எடுத்துரைக்கும் வகையில் இந்நிகழ்வு உள்ளது.

இதில் அனைத்து ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் அர்ப்பணிப்பும் அடங்கும்.வெற்றி பெற்ற மாணாக்கர்களை சர் ஐசக் சர் ஐசக் நியூட்டன் கல்வி குழுமத்தின் தாளாளர் முனைவர். த. ஆனந்த் அவர்கள் வெற்றி மாணாக்கர்களை பாராட்டி வெகுமதி வழங்கி கௌரவித்தார்கள். இயக்குனர் திரு.த சங்கர் அவர்கள் வெற்றி பெற்றவர்களை பாராட்டினார்கள்.

ஆலோசகர் மற்றும் இருபள்ளி முதல்வர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். நிர்வாகம், மாவட்ட அளவில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் மதிப்பெண் பெற உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது.