• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கொடைகானலில் கட்டப்படும் தனியார் கட்டிடபணியால் பொதுமக்கள் படுகாயம்

Byதரணி

Feb 10, 2023

தனியார் கட்டிட பணிகளுக்காக கொடைகானலில் வெடிவைத்து பாறைகளை தகர்ப்பதால் பொதுமக்கள் மீது விழும் கற்களால் பலர் காயமடைந்து வருகின்றனர்.
கொடைக்கானல் நகர் பகுதியில் பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் மாணவ மாணவிகள் பயன்படுத்தும் முக்கிய சாலையான அரசு மருத்துவமனை பெட்ரோல் பங்க் .விடுதிகள் உள்ளிட்ட பகுதியில் தற்போது தனியார் கட்டிடம் கட்டி வருகின்றனர் .இவர்கள் பகலிலேயே பாறைகளை உடைப்பதற்காக வெடிவைத்து வெடிப்பதால் சாலையில் நடந்து செல்லும் பெண்கள் குழந்தைகள் அதேபோல் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மீது வெடிவைத்து தகர்க்கும் பாறை கற்களால் விழுகின்றன. இதை எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வது கிடையாது. அதேபோல் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் இந்தச் சாலை வழியாகத்தான் கொடைக்கானல் நகருக்கு செல்ல வேண்டும். அப்படி உள்ள சூழ்நிலையில் பகலிலேயே வெடி வைக்கின்றனர் .நேற்று பகலில் இருசக்கர வாகனத்தில் சென்ற பாக்கியபுரத்தை சேர்ந்த இளைஞர் மீது வெடிவைத்த கல் முதுகில் தாக்கியுள்ளது .தொடர்ந்து பொதுமக்கள் மீதும் கற்கள் விழுகின்றன ஆனால் நகராட்சி நிர்வாகமும் அதிகாரிகளும் யாரும் கண்டு கொள்வது கிடையாது. மேற்கு தொடர்ச்சி மலையில் வெடிவைத்து வெடிப்பதற்கு அனுமதி இல்லை என்று கூறும் பொழுது அனைவரும் செல்லும் முக்கிய சாலையில் வெடிவைத்து வெடிப்பது எப்படி என கேள்வி எழுப்பின்றன பொதுமக்கள்?