சோழவந்தானில் அதிகரித்து வரும் தெரு நாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்து, நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைத்ததுள்ளனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். குறிப்பாக ஜெனகை மாரியம்மன் கோவில் பகுதி பேருந்து நிலையம் பகுதி வட்ட பிள்ளையார் கோவில் பகுதி ஆகிய இடங்களில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் ஒரே இடத்தில் கூட்டமாக அங்கும் இங்கும் ஓடி செல்வதால் பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்தில் பத்துக்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பேருந்தில் ஏற செல்லும் பொது மக்களை விரட்டுவதும், குறைப்பதுமாக அச்சுறுத்துவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பேருந்து நிலையத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. மேலும் இரு சக்கர வாகனங்களில் செல்வர்களிடம் 5க்கும் மேற்பட்ட நாய்கள் குறுக்கே வருவதால் விபத்து ஏற்படுவதாக கூறுகின்றனர். பல இடங்களில் நாய் கடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து சோழவந்தான் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அதிக அளவில் வரும் நிலையும் ஏற்படுகிறது. அதிகாரிகள் தெரு நாய்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.